போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன்(PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழும் இணைந்து தென் சென்னை மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வேளச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
PPFA வின் மாநில இணை செயலாளர் J.J. வெங்கட்ராமன் தலைமையில், தென்சென்னை மாவட்டத் தலைவர் P. ஹரிகிருஷ்ணன் முன்னிலையில் PPFA வின் மாநிலத் தலைவர் லயன் லி. பரமேஸ்வரன், நிறுவனர் P.V. ஜெயக்குமார், இணை செயலாளர் A.G. அசோக் குமார், தலைமை நிலைய செயலாளர் கே. சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சுமார் 5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு கோஷங்களுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு இனிதே நிறைவுற்றது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி