பிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”
PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வருகின்ற ஆகஸ்டு 24 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு விழா மற்றும் ஜீனியஸ் டீவியின் 6 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவராக செயல்பட்டு வந்த திரு. S.M. பாஷா மற்றும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த திரு. A. அப்பாசாமி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக பதவி உயர்வு பெறுகின்றார்கள்.

மாவட்ட தலைவராக திரு. S. இதயதுல்லா, துணை தலைவராக திரு. சத்தியநாராயணன் செயலாளராக R. சையத் அப்சல், இணை செயலாளராக திரு. Ln. L. ஜெபசிங்ராஜ், துணை செயலாளராக திரு. V. சேகர், ஒருங்கிணைப்பாளராக திரு. M. முகமது நிசாம்‌ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணலி நகரியம், இளைஞர் அணி தலைவராக திரு. S. வேல்முருகன், செயலாளராக திரு. S. ஹேமந்த குமார், இணை செயலாளராக திரு. J. சரவணகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் அணி தலைவராக திரு.I. சுஹேல், துணை தலைவராக திரு. K. கருணாகரன், செயலாளராக திரு. ரமேஷ், துனண செயலாளராக திரு. முகமது அஹ்மத் செரீப் ஆகியோருடன் கண்காணிப்பு குழு தலைவராக ” மெட்ரோ மேன்”திரு. S. அன்பு, செயலாளராக ” ஜீனியஸ்” P.K. மோகனசுந்தரம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் நமது ஆண்டு விழா சிறப்பாக செய்திட முழு ஒத்துழைப்பினை தருவதுடன் செப்டம்பர் மாதம் தங்கள் மாவட்டம் சார்பாக மக்கள் நலனுக்காக ” மாபெரும் மருத்துவ முகாம்” நடத்திடவும் உறுதியளித்தனர். இறுதியில் ‌நன்றியுரையினை PPFA மாநில இளைஞர் அணி தலைவர் திரு. Ln. L.வேலாயுதம் நிகழ்த்தினார்.

கூட்டத்தில் PPFA தலைமை நிலைய செயலாளர் திரு.”ஜீனியஸ்” K. சங்கர், PPFA முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி திரு.B. லஷ்மி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா

Check Also

குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை …