கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் சேர்க்க அங்குள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் கடந்த ஏப்ரல மாதம் முதல் உக்ரைன் அரசு படையுடன் போரிட்டு வருகிறார்கள். இரண்டு மாகாணங்களை கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்துவரை இங்கு நடந்த தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.இதனால் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் பிரச்சினையில் ரஷியா தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் மாஸ்கோவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்கில் நேற்று மாபெரும் போர் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.பேரணியில் கலந்து கொண்டவர்கள் ரஷியா மற்றும் உக்ரைன் கொடிகளை ஏந்தி வந்தனர். அவர்களை போரை நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பினர் இதே போன்று ரஷியாவின் பல நகரங்களிலும் போர் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


