உடற்பயிற்சியால் சல்மான் கானுக்கு நோய்?

சல்மான் கானுக்கு ஏதோ நோய் இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தி பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது படங்கள் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சல்மான் கானுக்கு அதிக பெண் ரசிகைகள் உள்ளனர். இதற்கு காரணம் அவரது உடற்கட்டு. தினமும் கடும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளார். தற்போது சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. ஆனாலும் உடற்கட்டு குறையவில்லை. தொடர்ந்து அவர் உடற்பயிற்சிகள் செய்வது பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக அவரை ஏதோ ஒரு நோய் ஒன்று தாக்கி இருப்பதாக கூறுகின்றனர். இதற்காகவே அவர் அடிக்கடி லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார் என்று இணைய தளங்களில் வதந்திகள் பரவி உள்ளது.

பட விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் நடிகைகள், மாடல் அழகிகள் சல்மான்கனையே சுற்றி இருப்பார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் என்றும் அந்த வதந்திகளில் கூறப்பட்டுள்ளது. இச்செய்திக்கு சல்மான் கான் உதவியாளர் கண்டனம் தெரிவித்து உள்ளார். சல்மான்கானை பிடிக்காதவர்கள் இது போன்ற வதந்திகளை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *