தனியார் பள்ளிகளின் பட்டினி போராட்டம்…

கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான துறைகளில் கல்வி துறையும் ஒன்று.

சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என கடந்த மூன்று மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எந்த வகையில் எப்படி மீள போகின்றோம்? என வழி தெரியாத காரணத்தாலும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினையும், தங்களிடம் பயிலும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்திற்கும் விடிவு கிடைக்காத காரணத்தாலும், நல்ல முடிவு வேண்டி தமிழகம் முழுவதும் “பட்டினி போராட்டத்தினை” தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில தலைவர் திரு. பேராசிரியர் திரு. A. கனகராஜ் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வழிக்காட்டுதலின்படி, புது வண்ணை ஷேபா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

இந்த “பட்டினி போராட்டத்தில்” மாநில துணைத் தலைவர் ” Gem of India” திரு. J.B. விமல் அவர்கள், மாநில செய்தி தொடர்பாளர் ” நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் மாநில அமைப்பாளர் திரு. S. ஜெரேமியா கிங்ஸ்லி அவர்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து, சமுக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினார்கள்.

‌இது பற்றி, திரு விமல் அவர்கள் கூறுகையில், மாணவர்களின் நலனிலும், அவர்களது கல்வி மேம்பாட்டிலும் தனியார் பள்ளிகள் முழுமையான அர்ப்பணிப்பை செய்து வருகின்றன.

ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள இந்த கொடிய இடர்பாடுகளால் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலமும், நிர்வாகிகள் அவர்களை சார்ந்துள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது.
இதிலிருந்து நாம் எந்த வகையில் மீள போகின்றோம் என்கிற நிலையில் அரசு நிர்வாகம் தான் நமக்கு நல்லதொரு வழிக்காட்டுதலை தெரிவிக்க வேண்டும். அதற்காக தான் இந்த பட்டினி போராட்டமே தவிர அரசுக்கெதிராக அல்ல என்பதை தெரிவித்தார்.

– செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
– படங்கள்: அகமது

Check Also

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து …