அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கியரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை, அங்குள்ள கடை ஒன்றை நோக்கி தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவருடைய காரை வழிமறிக்கும் வகையில் மற்றொரு கார் குறுக்கீடு செய்தது. அவருக்கு வழிவிடுவதற்காக, முக்கர் தனது காரை நிறுத்தினார். அப்போது, குறுக்கீடு செய்த நபர் தனது காரிலிருந்து இறங்கி முக்கரை சரமாரியாகத் …
மேலும் படிக்க9/11, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் தினம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 14ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில், 2,977 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் அந்த கோர சம்பவம் நிறைவேறியது. அமெரிக்காவில் பயணிக்கும் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், அவற்றில் இரண்டை, நியூயார்க்கில் …
மேலும் படிக்கஅமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின்போது நிருபர், ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நிருபர், ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார். இந்தப் படுகொலைக் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் துரத்தியதை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரவோனாகேவில் டபிள்யுடிபிஜே7 (WDBJ7 )என்ற செய்தி சானல் இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆலிசன் பார்க்கர்(24), ஒளிப்பதிவாளர் …
மேலும் படிக்கஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா
அதிபர் ஒபாமா அரசின் அதிருப்தி எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒபாமா இந்த ராஜினாமாவை உறுதி செய்துள்ளார். புதிய அமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரமகா நடைப்பெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் நேற்று திடீரென தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நிர்ப்பந்தம் காரணமாக அவர் பதவி விலகியதாக தெரிகிறது. ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு உலக …
மேலும் படிக்கஇந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் அமைப்பு அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர சம்பளம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை ‘தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக’ …
மேலும் படிக்கஅமெரிக்க வெள்ளை மாளிகையில் மோடி எழுதிவைத்த வாழ்த்துக் குறிப்பு
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி வைத்த வாழ்த்துக் குறிப்பு. இதில், வெள்ளை மாளிகையில் தாம் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும், இரு நாட்டு உறவுகளுக்கான கட்டாயத்தையும் குறிப்பிட்டும், மக்களை இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.
மேலும் படிக்கபிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் …
மேலும் படிக்கஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …
மேலும் படிக்கஅமெரிக்கா புறப்பட்டார் மோடி
ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …
மேலும் படிக்கஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐ.நா. சபையில் வலியுறுத்துகிறார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் முதல்முறையாக, வரும் 26ஆம் தேதி …
மேலும் படிக்க