பிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார்.

நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார்.

அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் சாதாரண முறையில் சந்தித்துப் பேசினார்கள். பின்னர் ஒபாமா, மோடிக்கு விருந்து அளித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று ஓவல் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *