ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னை வந்தார் அர்னால்ட். அப்பொழுது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பை நினைவு கூர்ந்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சென்னை வந்தபோது தன்னை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்க மக்கள் அனைவரும் “அம்மா” என்று அழைப்பதில் தான் ஆச்சர்யப்படவில்லை என்றும், நீங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செய்யும் உதவிகள் நெஞ்சை நெகிழச் செய்தது, பெண் காவல் …
மேலும் படிக்கஅமெரிக்காவுக்கு செக்: நான்கு மெக்டொனால்ட் உணவகங்களை மூடிய ரஷ்யா
ரஷ்யாவில் உள்ள அமெரிக்காவின் நிறுவனமான மெக்டொனால்ட்டின் 4 உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த 4 மெக்டொனால்ட் உணவகங்களிலும் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவகங்கள் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறி அவற்றை தாற்காலிகமாக மூடவும், இதுபோன்ற ஆய்வுகள் ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் உணவகங்களிலும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடையை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுக்கு …
மேலும் படிக்கஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்
இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ …
மேலும் படிக்கபாஜகவை அமெரிக்க அரசு வேவு பார்த்த விவகாரம்: இந்தியா கண்டிப்பு
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகளால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு …
மேலும் படிக்கஅமெரிக்காவில் இரட்டையர் இருவர் 24 நாட்கள் தள்ளி பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் இரட்டையர் இருவர் 24 நாட்கள் தள்ளி ஒருவருக்கொருவர் பிறந்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த டா சில்வா என்ற 35 வயது பெண் தாய்மை அடைந்திருந்தார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளருவதை “ஸ்கேன்” மூலம் உறுதி செய்த டாக்டர்கள், ஜுன் மாதம் 18 ஆம் தேதியை பிரசவ தேதியாக குறித்து தந்திருந்தனர். டாக்டர்களின் எதிர்பார்ப்பையும் மீறி, கருவுற்ற 24 ஆவது வாரமான …
மேலும் படிக்கஇலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் …
மேலும் படிக்கஉக்ரைன் நெருக்கடி: அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை
உக்ரைனில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவுத்துறைச் செயலர் செர்கெய் லவ்ரொவ்வும் லண்டனில் சந்திக்கவுள்ளனர். க்ரைமீயா பகுதி உக்ரெய்னிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது பற்றி அப்பகுதி மக்களிடையே வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான். அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும், உக்ரைனில் ரஷ்யத் …
மேலும் படிக்கமுன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க கோர்ட் ரத்து செய்து உத்தரவு
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், அவமதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளியான அவர் ஐ.நா. பிரதிநிதி குழுவிற்கு மாற்றப்பட்டார். இந்த நியமனத்தில் இழுபறி ஏற்பட்ட நிலையில் இந்தியாவிற்கு பணியிடமாற்றம் …
மேலும் படிக்கஉக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும்: ஒபாமா எச்சரிக்கை
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே …
மேலும் படிக்க