அமெரிக்காவுக்கு செக்: நான்கு மெக்டொனால்ட் உணவகங்களை மூடிய ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள அமெரிக்காவின் நிறுவனமான மெக்டொனால்ட்டின் 4 உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த 4 மெக்டொனால்ட் உணவகங்களிலும் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவகங்கள் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறி அவற்றை தாற்காலிகமாக மூடவும், இதுபோன்ற ஆய்வுகள் ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் உணவகங்களிலும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடையை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published.