ஒருநாள் போட்டி தொடருக்கு ரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடருக்கு பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டிவிட்டு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாககூறி நீக்கிய பிசிசிஐ, முன்னாள் வீரர்கள் சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோரை உதவி பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதரை பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் பலன் அளிக்குமா என்பது வரும் 25 ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் தொடரில் தெரிந்துவிடும்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published.