செக் மோசடி வழக்கு: டைரக்டர் சரண் கைது

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இன்று காலை நெல்லை அருகே பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். அவர்கள் ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் உங்களுக்கு சிவகாசி கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த உங்களை கைது செய்கிறோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் சிவகாசி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

செக் மோசடி வழக்கில் டைரக்டர் சரண் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *