தகராறு செய்த 5 பேரை அடித்து உதைத்து தந்தையைக் காத்த உ.பி இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனது தந்தையைத் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை அடித்துத் துவைத்த இளம்பெண்.

நடுத்தர வயதுடைய  ஒருவர் பைக்கில் தனது மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதை அடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அந்த மனிதரை கண்மூடித் தனமாகத் தாக்கத் தொடங்கியது. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் களத்தில் இறங்கினார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார்.

ஃபேஸ்புக்கில்  இப்போது அந்தப் பெண்ணின் வீரம் குறித்து செய்திகள் பரவி வருகிறது.  பொதுமக்கள் பலரும் அவரது துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *