Tag Archives: ஆன்மீகம்

பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், …

மேலும் படிக்க

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க

பக்ரீத் விடுமுறை அக்டோபர் 6ம் தேதி: அரசாணையில் தகவல்

பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை …

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவம் : பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதாலும், முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளதாலும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க குறைந்தது 30 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக வந்தவர்கள் 20 மணி நேரம் வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசின சேவையும், ஆர்ஜித சேவை டிக்கெட்டும் ரத்து …

மேலும் படிக்க

குலசேகரப்பட்டணத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா புதன்கிழமை (செப்டம்பர் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக மிகப் பிரம்மாண்டமாக தசரா திருவிழா கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினத்தில்தான். பல லட்சம் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூலித்து அம்மனுக்கு செலுத்துவர். இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு தசரா திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை …

மேலும் படிக்க

இன்று மகாளய அமாவாசை: ஆறுகள் மற்றும் கடலில் நீராடி முன்னோர்களை வழிபடும் மக்கள்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே ‘மகாளய அமாவாசை’ எனப்படுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய …

மேலும் படிக்க

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.25-இல் சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை: கடந்தாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. வரும் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு …

மேலும் படிக்க

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவதலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன. நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. …

மேலும் படிக்க

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014

மேலும் படிக்க

திருப்போரூர் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 2012-இல் பாலாலயம் செய்யப்பட்டு சன்னிதிகள் மூடப்பட்டு உற்சவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை …

மேலும் படிக்க