Tag Archives: உலகம்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல் இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈராக்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அந்நாட்டுக்குச் …

மேலும் படிக்க

சீனாவில் உள்ள தெருவில் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் 2 வயது சிறுவன். அதிர்ச்சி வீடியோ

சீனாவில் உள்ள தெரு ஒன்றில் இருந்த கடைக்கு ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார். தனது மகனை அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு அவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரை அவருடைய நண்பர் அழைக்கவே, சிகரெட்டை அங்கேயே வைத்துவிட்டு, நண்பரிடம் சற்று தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். தந்தை சிகரெட் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த அந்த இரண்டு வயது சிறுவன், தந்தை வைத்துவிட்டு போன சிகரெட்டை எடுத்து ஸ்டைலாக புகைபிடிக்க தொடங்கினான். …

மேலும் படிக்க

அமெரிக்காவில் இரட்டையர் இருவர் 24 நாட்கள் தள்ளி பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் இரட்டையர் இருவர் 24 நாட்கள் தள்ளி ஒருவருக்கொருவர் பிறந்த சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்த டா சில்வா என்ற 35 வயது பெண் தாய்மை அடைந்திருந்தார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளருவதை “ஸ்கேன்” மூலம் உறுதி செய்த டாக்டர்கள், ஜுன் மாதம் 18 ஆம் தேதியை பிரசவ தேதியாக குறித்து தந்திருந்தனர். டாக்டர்களின் எதிர்பார்ப்பையும் மீறி, கருவுற்ற 24 ஆவது வாரமான …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84,000 கோடி செலவழித்துள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

மேலும் படிக்க

மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம்: இலங்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படமாட்டாது என்று இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 26-வது கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ஆற்றிய தொடக்க உரையில், இறுதிக்கட்ட போரில் …

மேலும் படிக்க

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு நிபந்தனை, ஒரு மாதம் கெடு ஜி7 நாடுகள் கடும் எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால், அந்நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் ஜி8 என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தன. இந்த அமைப்பின் மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறவிருந்தது. ஆனால், உக்ரைன் நாட்டில் பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால் …

மேலும் படிக்க

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்

மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட் பேங்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தையான ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இந்த புதிய ரோபோவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு …

மேலும் படிக்க

ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி – வட கொரியா

“ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி” என வட கொரியா பகிரங்கமாக தாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “அண்டை நாடான வட கொரியா …

மேலும் படிக்க

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது? – ஆஸி. கடலாய்வு நிறுவனம்

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவனம் கூறியதாக ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், …

மேலும் படிக்க

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட்டுகிறது: ஆஸ்த்ரேலிய பிரதமர்

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட். [pullquote]அந்த மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா உத்தேசமாக 60 மில்லியன் டாலர்களை செலவழிக்கும் என்றாலும், மற்ற நாடுகளிடமிருந்தும் நன்கொடைகளை கோரும் எனவும் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.[/pullquote] அந்த விமானத்தின் பகுதிகள் இனியும் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் …

மேலும் படிக்க