Tag Archives: தேர்தல்

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராகுல் உறுதி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் அத்தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:– 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வன்முறையும், மத துவேசமும் கிடையாது. இந்திய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே சிறப்பான திட்டங்களை தந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் …

மேலும் படிக்க

மீண்டும் விரட்டப்பட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தேனி தொகுதியில் பிரசாரத்திற்குப போன இடத்தில் சீலையம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து கொண்டு கடந்த தேர்தலின்போது உறுதியளித்த பசுமை வீடு திட்டம் என்னவாயிற்று, எங்களுக்கு ஏன் வீடு கட்டித் தரவில்லை என்று கேட்டு எதிர்ப்பு குரல் கொடுக்கவே தேர்தல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் சென்றுவிட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். இதுப்பற்றி அந்த பெண்கள் கூறும்போது, பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் …

மேலும் படிக்க

குஜராத்தின் இன்றைய நிலை – எதில் முதல் இடம் ஜெயலலிதா விளக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தருமபுரி தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்தபோது கூறியதாவது: வாக்காளப் பெருமக்களே! ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை  விட தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக்  கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே …

மேலும் படிக்க

கணக்கு தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை ரத்து

அரசியல் கட்சிகளால் வாங்கப்படும் மற்றும் கொடுக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் இது செய்யப்பட வேண்டும். ஆனால், 2012 – 2013ம் ஆண்டுக்கான கணக்கை பல்வேறு கட்சிகள் இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளன எனத் தெரிகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை …

மேலும் படிக்க

கருணாநிதிக்கு, ஜெயலலிதா சவால் – நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?

ஆரணியில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், காவிரி பிரச்னை குறித்து, வாதம் செய்ய, சட்டசபையில் நேரம் ஒதுக்கலாம். அதில் விவாதித்து, யார் தவறு செய்தார்கள், யார் நியாயமாக நடந்து கொண்டார்கள், யார் நம் உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை, நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் எனக் கூறி இருக்கிறார். அவரது …

மேலும் படிக்க

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவு

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதனால் அனைத்து வாகனங்களையும் சோதனையிட ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், மாவட்டம் முழுவதும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. பணம், பொருள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதையடுத்து போலீஸ் வாகனங்களையும் தேர்தல் …

மேலும் படிக்க

துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

15-04-2014 அன்று துணை வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் 19ம் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

தவறாமல் வாக்களியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை அதனால் தவறாமல் வாக்களியுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமான பல கடமைகளில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. …

மேலும் படிக்க

நரேந்திர மோடிக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்! திருமணமானவர் என வேட்பு மனுவில் தகவல்

பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் எனவும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் …

மேலும் படிக்க

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி

நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பும னுவை தாக்கல் செய்த போது கட்சியின் கடிதத்தை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் இணைக்கவில்லை. இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் …

மேலும் படிக்க