Tag Archives: மோடி

பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…

சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று …

மேலும் படிக்க

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …

மேலும் படிக்க

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற …

மேலும் படிக்க

நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார்: ராம்ஜெத்மலானி வருத்தம்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 78வது நாளாக நீடிக்கிறது. ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்த நாட்டு மக்களை கீழே தள்ளிவிட்டனர். பிரதமர் நரேந்திர …

மேலும் படிக்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …

மேலும் படிக்க

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய …

மேலும் படிக்க

லலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்

லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. …

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று அதிமுக எம்.பிக்கள் 48 பேர் நேரில் சந்தித்து என்.எல்.சி தொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர். ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி  கடந்த மாதம் 20ந்தேதி முதல் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில்  நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் …

மேலும் படிக்க

சார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …

மேலும் படிக்க