ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேரும் ஏர்இந்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட அவர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இந்திய செவிலியர்களை கேரள முதல்வர் உமன்சாண்டி வரவேற்றார். மேலும் ஈராக்கில் சிக்கி தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்கஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை
உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …
மேலும் படிக்க