Tag Archives: ஈராக்

ஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஈராக் அரசு படையினர் தங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கவே, தற்போது 4 பேரை எரித்து கொன்றதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்

ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி  உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …

மேலும் படிக்க

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல் இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈராக்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அந்நாட்டுக்குச் …

மேலும் படிக்க