நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …
மேலும் படிக்ககிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்; மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்திக் …
மேலும் படிக்கசமத்துவ மக்கள் கட்சி – அதிமுக கூட்டணி தொடரும்: சரத்குமார்
வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் …
மேலும் படிக்கசட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்
தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …
மேலும் படிக்கதமிழ்நாட்டில் 16 புதிய தாலுகாக்கள் மற்றும் 4 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில் நடப்பு ஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தாலுகாக்கள் மர்றும் 4 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், “நடப்பு ஆண்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து கீழ்ப் பென்னாத்தூரில் புதிய …
மேலும் படிக்கஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …
மேலும் படிக்கசுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், “விசையுறும் பயதினைப் போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்” என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் …
மேலும் படிக்கதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கசட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு
தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …
மேலும் படிக்க‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்
சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …
மேலும் படிக்க