இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் …
மேலும் படிக்கவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …
மேலும் படிக்கமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …
மேலும் படிக்கதமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது, கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டம்
கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார். கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக …
மேலும் படிக்கஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்
ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை …
மேலும் படிக்கசுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், “விசையுறும் பயதினைப் போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்” என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் …
மேலும் படிக்கசிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என மத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு சுமார் 3 இடங்களில் ஒவ்வொரு இஞ்ச் அளவிலும் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் …
மேலும் படிக்கதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்குகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24-ம் தேதி துவங்க உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் கூட்டத் தொடடரின் முதல்நாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், அப்துல்கலாம் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செப்டம்பர் 28ம் தேதிவரை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …
மேலும் படிக்ககாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர …
மேலும் படிக்க