தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் இராயபுரம், ரம்ஜான் மஹாலில் 11-06-19 மாலை 7 மணியளவில் “இதயங்கள் இணையும் விழா” மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை “நண்பன்” திரு. எம். அபுபக்கர் நிகழ்த்த வரவேற்புரை பாடல் சிவஸ்ரீ. ஆனந்த சுவாமிகள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக “செவாலியே” கலைமாமணி திரு. வி.ஜி.சந்தோசம், திரு. டி.எம்.எச் ஹாரூன், மாநில தலைவர், தமிழ்நாடு இளைஞர் …
மேலும் படிக்கஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்
14 – 02 – 2019 ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆளுநர் மாளிகைப் புகழ் பேராசிரியை நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர் விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார். இந்த தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்
இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம். செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், ஆசிரியர், பி. வெங்கடேசன் இணை ஆசிரியர், லி. பரமேஸ்வரன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.
மேலும் படிக்கதிருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்
ஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை நண்பர்களே வணக்கம், நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் …
மேலும் படிக்கநாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: டி.எஸ்.ஆர். சுபாஷ்
கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளதையே உணர்ந்துகிறது. தந்தை பெரியார் வழியில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் பல வகையான புரட்சிகள் செய்தவர் …
மேலும் படிக்கமாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பத்திரிகை தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை …
மேலும் படிக்ககத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்
சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘ படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …
மேலும் படிக்கசெய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி
தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …
மேலும் படிக்கசந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..! – DSR சுபாஷ்
சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தெலுங்கானா தெலுங்கானாவை மதிக்க வேண்டும். தெலுங்கானாவை தொடர்ந்து அவமதித்தால் பத்து அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்து விடுவோம் எனக் கூறியுள்ளார் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர் குரல் ஆசிரியருமான DSR சுபாஷ் அவர்கள் சந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..! என கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?
சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …
மேலும் படிக்க