Tag Archives: மதுரை உயர்நீதிமன்றம்

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு …

மேலும் படிக்க

தமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கறிஞர் சோலை சுப்ரமணியம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த …

மேலும் படிக்க