சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA) சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம் மக்களுக்காக (சுமார் 200 நபர்களுக்கான உணவு) மதிய உணவினை 22.11.2021 திங்கட்கிழமை, மதியம் 1 மணியளவில், போலீஸ் …
மேலும் படிக்கசென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உணவு வழங்கப் பட்டது….
சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மதிய உணவு வழங்கப் பட்டது. சென்னை தண்டையார்ப்பேட்டை, சேனியம்மன் கோவில் அருகே துணை ஆணையர் திரு. சிவபிரசாத் அவர்கள் தனது காவல்துறை குழுவுடன் இணைந்து நேரிடையாக மக்களுக்கு மதிய உணவினை வழங்கினார். மக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களது பசிப்பிணியினையும் இது போன்ற தருணங்களில் போக்க முடியும் என்பதை …
மேலும் படிக்கசென்னையில் சில மணி நேரம் மழை.. இதற்கே மக்கள் தத்தளிக்கும் அவலம்…
சென்னையில் சில மணி நேரம் பெய்த மழையால் அனைத்து சாலைகளும், மழை வடிகால் சரியாக இல்லாத காரணத்தால் மழை நீரால் நிரம்பியது. இதனால் சாலைகள் சரியாக தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். பாதசாரிகளும் சாலைகளில் எங்கே பள்ளம் இருக்குமோ என தடுமாறி தான் சென்றனர். வடகிழக்கு பருவ மழை வரும் போது மட்டும்தான் அரசு விழித்துக் கொண்டு பணி செய்கிறது. இந்த பணியினை அதற்கு முன்னரே செய்யாமல் …
மேலும் படிக்கசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔
இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …
மேலும் படிக்கதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கோவை காய்கறி சந்தையில் வழக்கமாக விற்கப்படும் விலையிலிருந்து 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், கோவை காய்கறி சந்தையில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென என உயர்ந்துள்ளது. மழை காரணமாக ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் …
மேலும் படிக்கசென்னையில் நேற்றிரவு கன மழை
சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மேலும் படிக்கவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …
மேலும் படிக்கதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி சற்றே நகர்ந்துள்ளது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்கமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …
மேலும் படிக்கசென்னையில் விடிய விடிய மழை – மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவும் முழுவதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க