கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது முதல்வர் படத்தை அலுவலர் இருக்கைக்கு பின் உள்ள சுவரில் மாட்டவேண்டும் குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.
மேலும் படிக்கமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …
மேலும் படிக்கஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …
மேலும் படிக்கஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனை முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்தபோது, “நோய் இருப்பது உரிய நேரத்தில் அறியப்பட்டால் தக்க சிகிச்சை பெற்று பூரண குணம் …
மேலும் படிக்க‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்
சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …
மேலும் படிக்கமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவராத்திரி வாழ்த்து
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள நவராத்திரி வாழ்த்துச் செய்தியில், வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ …
மேலும் படிக்க