சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …
மேலும் படிக்கவிபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்
இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது …
மேலும் படிக்கமாயமான அல்ஜீரிய விமானம் ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விபத்துக்குள்ளாகியது #AH5017
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின், வாகடூகு அருகிலுள்ள புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து அல்ஜீரியா தலைநகரின் ஹொவாரி விமான நிலையத்திற்கு செல்லும் ஏர் அல்ஜீரிய விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், 110 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில், …
மேலும் படிக்க110 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்: கடத்தப்பட்டதா?
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மாயமானதாக திடுக்கிடும் தக்வல் வெளியாகியுள்ளது. பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 1 மணி நேரத்திற்குப் பிறகு தொடர்பை இழந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ’வான்வழிச் சேவைகள் இயக்ககம் ஏர் அல்ஜீரியா விமானத்தின் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் உவாகாடவ்கோவிலிருந்து அல்ஜியர்ஸ் செல்லும் விமானம் ஆகும். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 50 …
மேலும் படிக்கமலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியன் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர். கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா மற்றும் பரிக் அப்துல் ஹமித் ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர். அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்தச் …
மேலும் படிக்ககாணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நாளாகியும் விடையில்லை
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் திரைகளில் இருந்து காணாமல்போய் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியும் அது என்ன ஆனது என்று தெரியவ ராமல் இருக்கும் சூழ்நிலையில் மலேசிய அதிகாரிகள் தேடுதல் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன என்றாலும் இந்த விமானத்தின் பாகங்ககள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வியட்நாமுக்கு அருகே தென் சீனக் கடலில் சில பொருட்கள் …
மேலும் படிக்க