110 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்: கடத்தப்பட்டதா?

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மாயமானதாக திடுக்கிடும் தக்வல் வெளியாகியுள்ளது.

பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 1 மணி நேரத்திற்குப் பிறகு தொடர்பை இழந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

algeriaplanemissing
’வான்வழிச் சேவைகள் இயக்ககம் ஏர் அல்ஜீரியா விமானத்தின் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் உவாகாடவ்கோவிலிருந்து அல்ஜியர்ஸ் செல்லும் விமானம் ஆகும். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது” என்று அந்த ஏர்லைன் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் 135 பேர் பயணிக்க முடியும் என்றும், தற்போது 110 பயணிகள் இதில் இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஏர் அல்ஜியர்ஸ் தெரிவித்துள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published.