உலகம்

அமெரிக்க அதிபர் ஒருவர் 50 ஆண்டுகளில் முதல் தடவையாக மலேசியா பயணம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா சென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் தடவை. பசிபிக் பிராந்திய வணிக ஒப்பந்தம் ஒன்றில் மலேசிய அரசாங்கத்தை கையொப்பம் இடுமாறு ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எல்லாக் காலங்களிலும் நல்லவிதமாக இருந்ததில்லை. அமெரிக்க கொள்கைகளை மலேசியப் பிரதமர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானப் பயணிகளின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முடிவு?

மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் தேடுதல் சில வருடங்களாவது எடுக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த விமானத்தின் காணாமற் போன பெரும்பான்மை சீனப் பயணிகளின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமக்கு உறுதியான பதில் தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சீனாவின் பீஜிங்கில் MH370 பயணித்த தமது குடும்பத்தினர் குறித்த தகவலுக்காக ஹோட்டலில் காத்திருந்த …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா விமானத்தை கடத்த முயற்சியா?

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் ஃபாலி தீவுக்கு வந்துகொண்டிருந்த விர்ஜின் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் பைலட் அறைக்குள் பயணி ஒருவர் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பைலட்டை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அறைக்குள் ஒருவர் நுழைய முயலுவதை பார்த்து பரபரப்படைந்த விமானத்தின் பைலட், விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக ஃபாலி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

தென் கொரியாவில் ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து 450க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் திடீரென மூழ்கியது. அவசர உதவி கோரி கப்பலில் இருந்து வெளியான சமிக்ஞையை பார்த்து மீட்புக்குழுவினர் விரைந்தனர். அதற்குள் கப்பல் பாதியளவு மூழ்கிவிட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை …

மேலும் படிக்க

உலகக் கோப்பை கால்பந்து நடக்கவிருக்கும் பிரேஸிலில் வன்முறை

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடப்பதற்கு இரு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பிரேஸிலின் நகரான ரியோ டி ஜெனிரோவில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூர் நபர் ஒருவரை போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று தவறுதலாக நினைத்து அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக கருதி, போலீஸாருக்கும், நகர வாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அந்த நகருக்கு அருகே, கார்களையும், …

மேலும் படிக்க

பெங்களூருக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கம் – லேண்டிங் கியர் பிரச்சனை

மலேசியன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில், எமர்ஜென்சி லேன்டிங் செய்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் வலது லேன்டிங் கியர் இயங்காத நிலையில், விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து இறங்கியுள்ளது. இன்று அதிகாலை எமர்ஜென்சி லேன்டிங் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் MH192 விமானம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.09-க்கு புறப்பட்டது. பெங்களூரு செல்லவேண்டிய …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து – 300 பேரை காணவில்லை தேடும் பணி தீவிரம்

தென் கொரியக் கப்பல் முழ்கிய விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் சுமார் 300 பேரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். கப்பலில் சென்ற சுமார் 470 பேரில் இதுவரை 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும், தேடும் விளக்குகளைப் பயன்படுத்தி அவசரச் சேவைப் பணியாளர்கள் தேடினர். ஆனாலும், கடலில் சுழல் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள், கப்பலுக்குள் நுழைய முயன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இது வரை குறைந்தது …

மேலும் படிக்க

தென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் மூழ்கி விபத்து-107 பேரைக் காணவில்லை

தென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 107 பேரைக் காணவில்லை. கப்பல் ஒரு பக்கமாக சாய்வதாக கப்பற்படைக்கு தகவல் வந்ததும், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலமாக விரைந்து சென்ற மீட்புக் குபவினர் 368 பயணிகளை பத்திரமாக மீட்டனர். 2 உடல்களைக் கைப்பற்றினர். மீதம் 107 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. இந்த கப்பலில் சுமார் 338 மாணவர்களும், அவர்களது …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் முதல் தேடலில் எந்த தகவலும் இல்லை

இந்துமகா சமுத்திரத்தில் தனது முதல் தேடல் நடவடிக்கையின் போது, சிறிய ஆளில்லா நீர்மூழ்கியால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க கடற்படையின் காப்டன் ஒருவர்  கூறியுள்ளார். தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான் அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் …

மேலும் படிக்க