ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பான விசாரணையில் ஆதார் அட்டை கட்டாயம் என்று அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது. மேலும், அரசு அடையாள அட்டைக்காக பெறப்படும் தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *