ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கடலுக்கடியில் இருந்து வரும் சிக்னல் கேட்டது

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று, விமான கருப்பு பெட்டி எழுப்பும் ஒருவிதமான சிக்னலை கடலுக்கடியிலிருந்து கேட்டுள்ளதாக தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார்.

ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு கடல் பரப்பில் இந்த சிக்னலைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சிக்னல் காணாமல்போன விமானத்துடைய பிளாக் பாக்ஸில் இருந்துதான் வருகின்றனவா என்பதை உறுதிசெய்ய நாட்கணக்கில் ஆகும் என்று அங்கஸ் ஹூஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு பெட்டியின் மின்சக்தி விரைவில் தீர்ந்து போகும் என்ற நிலையில், மிகவும் அவசரத்துடன் தேடுதல் பணிகள் நடந்துவந்தன.

இந்த விமானத்தின் பகுதிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 …

Leave a Reply

Your email address will not be published.