ஆ.ராசா தொகுதியில்(நீலகிரி) பிஜேபி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டது. கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுக்க தவறியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர் தரப்பில் கட்சியின் அங்கிகார கடிதத்தை சற்று தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் கடிதம் இதுவரை மாவட்ட ஆட்சியர்க்கு கிடைக்கவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் மனு அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படுகிறது. மணிரத்தினத்திற்கு 10 பேர் முன்மொழியாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு மனு தாக்கலின் போது 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த மணிரத்னத்தின் மனைவி சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே சுதா தான் பாமகவின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த மணிரத்னம் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி பாமகவில் இணைந்து உடனடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் …

Leave a Reply

Your email address will not be published.