சமையல் எரிவாயு மானியம் ரத்தா? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும், மானியம் தொடரும் என்றும் கூறினார்.

எனினும் சமையல் எரிவாயு மானியத்தை பெற வேண்டியவர்கள் யார்? பெறக் கூடாதவர்கள் யார்? என்பதை விவாதிக்க வேண்டிய தருணம் இது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *