சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் 2006 ம் ஆண்டு ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை முறித்துக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

இந்த வாய்ப்பில் நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது (ராஜா ராணி’ பட விளம்பரம்) போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் இது நம்ம ஆளு பட விளம்பரத்திற்காக என்றும் கூறுகின்றனர். உண்மை இன்னும் சில நாளில் வெளிவரும்.

Check Also

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *