டில்லி சட்டசபை கலைப்பு : குடியரசுத் தலைவர் உத்தரவு

டில்லி சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் டில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், டில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார்.

இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், டில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Check Also

டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *