தனியார் தொலைக்காட்சியிடம் ரூ100 கோடி நஷ்டஈடு கேட்கும் தோணி!

ஐபிஎல் மாட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நட்ட ஈடு கோரியும், தன்னை பற்றி செய்தி வெளியிட  தடை வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோணி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐபிஎல் 6 வது போட்டியில் மாட்ச் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில் சென்னை அணி கேப்டன் தோணிக்கும் மாட்ச் பிக்ஸிங்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்த செய்தியை வேளியிட்டு தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ரூ100 கோடி நட்ட ஈடு கோரியும் மற்றும் தம்மை பற்றிய செய்திகளை வெளியிட தடை விதித்தும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தோணி சம்பந்தமான செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *