தாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்

டெல்லி சுல்தாபுரில் பிரசாரம் செய்த போது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்து விட்டார். லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று லாலி வீட்டுக்குப் சென்ன்றார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்து, அவரிடம் பேசினார். கன்னம் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார்.

லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் லாலியும் காயமடைந்தார். கெஜ்ரிவால் சந்திப்புக்குப் பின்னர் லாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கெஜ்ரிவாலிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். நான் செய்தது பெரிய தவறு என்பதை உணர்கிறேன் என்றார். ஆனால் எதற்காக அடித்தார் என்பது தெரியவில்லை

Check Also

ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது (A Storm is Coming) – ஆம் ஆத்மி பார்ட்டி

A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ …

Leave a Reply

Your email address will not be published.