நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி வழக்கு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பும னுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது.

ஆனால் மற்ற கட்சிகளிடம் குருமூர்த்தி விலை போய்விட்டார் என்று கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்து பாஜக அலுவலகத்தை தாக்கினர் . இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தி இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமது வேட்புமனு தள்ளுபடி செய்தது தவறானது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை அவசர வழக்காக கருத முடியாது. தேர்தல் வழக்காக மட்டுமே கருத முடியும் என்று கூறியது.

Check Also

​இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை என்பது பீகார் தேர்தல் மூலம் நிரூபனம்: ஜவாஹிருல்லா

இந்தியாவில் மதவெறிக்கும், வெறுப்புணர்விற்கும் இடமில்லை என்பதை பீகார் மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் நிரூபித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *