மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய உண்மைகள் வேண்டும்: உறவினர்கள் வலியுறுத்தல்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனர்களின் உறவுக்காரர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

விமானத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று கூறியதற்காகவும் , தகவல்களை வெளியிடுவதில் தாமதம் செய்ததற்காகவும் மலேசியன் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானம் தேடப்படும் இடத்தில் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பத்து விமானங்களும், எட்டு கப்பல்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

தேடலில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான ஆஸ்திரேலியக் கப்பலில் காணாமல் போன விமானத்தின்பிளாக் பாக்ஸை கண்டுபிடிப்பதற்கான ராடார் கருவி ஒன்று இருக்கிறது.

கடல் மட்டத்துக்கு கீழே 6000 மீட்டர்கள் ஆழத்திலிருந்து சிக்னல் வந்தால் கூட கப்பலில் உள்ள இந்த ராடார் கருவி அடையாளம் கண்டுவிடுமாம்.

ஆனால் பிளாக் பாக்ஸைக் கண்டுபிடிப்பதற்கான காலக்கெடு குறைவாக இருக்கிறது காரணம் இன்னும் ஒரு வாரத்தில் அதன் பாட்டரிகள் தீர்ந்துவிடுமென்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பொருட்களளை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.

சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து அள்ளுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன. ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது.

கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

Check Also

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *