மேஜர் முகுந்த் உடலை எடுத்து வந்த ராணுவ பைலட் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்த விமானி முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏர்-இந்தியா விமானத்தை ஓட்டி வந்த கேப்டன் எஸ். சீனிவாசன் என்ற அந்த விமானி எழுதிய கடிதத்தில்,

pilot_letter_martyr360

பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு என்று தொடங்கும் அக்கடிதத்தில், உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடையவைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த வலிமையும் தருவார் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Check Also

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் …

Leave a Reply

Your email address will not be published.