மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை.

மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித முஸ்லிம்களே உள்ளனர். ஆனால் உ.பி.யிலோ 42 சதவிகத முஸ்லிம் மக்கள் உள்ளனர். எனவே நான் மோடியை எதிர்த்து தீவிரமாக மோதுவேன். அவருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவரை துண்டு துண்டாக வெட்டி கொல்லுவேன் என்று அவர் பேசியதாக தெரிகிறது.

இவ்வாறு பேசியதற்கு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தான் தவறு செய்துவிட்டதாகவும், தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *