விண்வெளிக்கு பொருட்களுடன் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியது: நாஸா

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்ற ஒப்பந்தக்காரர்களுடைய ஆளில்லா ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாஸா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அது தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பொறுப்பை தனியார் வசம் கொடுத்த பின் நடந்த முதல் நிகழ்வு இந்த விபத்து என்பது கவனிக்கத்தக்கது.

செவ்வாய்க்கிழமை நேற்று விர்ஜீனியாவில் உள்ள நாசா ராக்கெட் ஏவு தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இது வெடித்துச் சிதறியது. இதனால் ராக்கெட் ஏவுதளத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.

 

Check Also

பிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!

நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் …

Leave a Reply

Your email address will not be published.