தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் திரு.P.K.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் ஆகியோர் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளான வார்டு 54, 57 போன்ற பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
பருவமழையை முன்னிட்டு ஆங்காங்கே பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சாலைகளை சீர்செய்யவும், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றி மக்கள் சிரமமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இது பற்றி கருத்து தெரிவித்த மாநகராட்சி ஊழியர்கள், பணி செய்வதற்கு நாங்கள் ரெடி தான். ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளமே இன்னும் வரலை. அதோடு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களும் குறைவாக இருப்பதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி