மக்களவை தேர்தல் 2014 க்கான வாக்குபதிவு நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 12-ம் தேதி வரை 9 தேதிகளில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மொத்தம் 81 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலை விட புதிதாக 10 கோடி பேர் வாக்களிக்க இருப்பதால் இந்த முறை வாக்கு பதிவு நேரத்தை 1 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குபதிவு முடியும் நேரத்தில் நீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்து வாக்களித்ததையும், கோடைக்காலம் என்பதால் மக்கள் மதியத்திற்கு பிறகு வாக்களிக்க அதிக அளவில் வருவார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை நடைமுறைபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.