திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மனிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினர். தொடாந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.