பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட கருத்துக்கள் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என்று கூறி தேவையில்லாத பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்
இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என கூறி இது போன்ற அற்பத்தமான கருத்துக்களை வெளியிடுவதால், வளர்ச்சி நல்ல ஆட்சி உள்ளிட்டவைகளில் இருந்து தேர்தல் பிரச்சாரம் விலகி செல்கிறது என்று தெரிவித்துள்ளார்