மும்பையில் கட்டி முடிக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சான்டாக்ரூஸ் சேம்பர் லிங்க் ரோடு(SCLR) என்ற இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனை இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்கின்றனர்.
ஆனால் திருநெல்வேலியில் வெகு நாட்களாக ஒரு இரட்டை அடுக்கு மேம்பாலம் பயன்பாட்டில் உள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி