நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர்.
இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், பூங்காக்கள், சாலைகளில் வாகனங்கள் ஓடாமல், பொதுமக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது .
மேலும் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு விசை படகுகளும் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
சென்னை மாநகராட்சி சார்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினையும் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
வடசென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஆவின் பால், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகள் தவிர பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டது.
வட சென்னை முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வடசென்னை மக்கள் தங்களது பங்கினை செலுத்தும் வகையில் சுய ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே கடைபிடித்தனர்.
மேலும் காவல் துறை,போக்குவரத்து காவல் அனைத்தும் ஆங்காங்கே துரிதமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.