காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கொண்டு, இந்தியாவில் உள்ள உயர்ந்த கட்டங்கள் மீது மோதி அமெரிக்காவில் நடந்த 9/11 போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை, அது குறித்து வெளியான தகவல்களும் உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில், இந்தியா, மலேசிய அரசுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. விமானத்தைத் தேட கப்பல்களையும் அனுப்பியுள்ளது என்றார்.
அமெரிக்க அதிகாரி அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிகாரி ஒருவர் ட்விட்டரில் இந்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய விமானம் பறந்த திசை, அதன் எரிபொருள் கொள்ளளவு, அதிக தொலைவுக்குப் பறக்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சில விஷயங்கள் . அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை விமானங்களை மோதி தகர்த்தது போன்று இந்தியாவின் ஏதாவது ஒரு நகரம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதுபோன்ற தகவல்கள் எதுவும் இதுவரை புலனாய்வு துறைக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்திய வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் ஊடுருவ முடியாது:
இந்திய வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் அத்துமீறி நுழைய முடியாது என்று விமானப் படை மூத்த அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மலேசிய விமானத்தைக் கடத்தி ஏதாவது ஒரு இந்திய நகரம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு வாய்ப்பு இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்துள்ள செய்திகளில்:
அமெரிக்காவில் ஒரு நகரில் இருந்து வேறொரு நகருக்கு விமானம் பறந்தபோது உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மலேசிய விமானத்தைப் பொறுத்தவரை இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பில்லை.
நாட்டின் வடகிழக்கு, மேற்கு பிராந்திய வான் பகுதிகள் 24 மணி நேரமும் சக்திவாய்ந்த ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ரேடார்களின் கண்களில் இருந்து எந்த விமானமும் தப்பிக்க முடியும். ஆனால் இந்திய ராணுவ ரேடார்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்திய விமானப்படை சார்பில் நாடு முழுவதும் ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன. போயிங் 700 ரக விமானம் மிகப் பெரியது. அந்த விமானம் ராணுவ ரேடாரில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.