வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
60,817 வாக்குச் சாவடிகளில் 17,684 சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதி காலை 7 மணியிலிருந்து இணையம் மூலம் நேரடியாக வாக்குப் பதிவை காணலாம். public.gelsws.in என்ற இணையதள முகவரியில் வாக்குச் சாவடி நடவடிக்கைகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி வாக்குப்பதிவை காண்பதற்கு முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களின் கைப்பேசிக்கு இணையதளத்தின் உள்ளே செல்வதற்கான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.