இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்த முடிவெடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று இதற்கு தாங்கள் உடன்பட்டுள்ளதாக நீதிபதி முட்கல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் மேலும் விசாரணைகள் தேவை என்றும் அதிலும் குறிப்பாக 13 பேர்களின் நடத்தை தொடர்பாக கூடுதலாக ஆராயப்பட வேண்டும் என அந்த அறிக்கை கூறியிருந்தது
மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை கிரிக்கெட் வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த குழுவை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி