நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள்.
மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) செயலாளர் கே அருள் குமார், துணைத் தலைவர் எஸ். ராஜேந்திரன் முன்னிலை வகித்திட மாநில் பொதுச் செயலாளர் (PPFA) லயன் சி. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையில், சங்கத்தின் நடவடிக்கைகளில் நமது பங்கு எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
இது வெறும் சங்கம் அல்ல. மக்களின் அங்கமாக அரசியல் சார்பற்ற சங்கமாக இருந்தாலும் இதில் உள்ளவர்கள் எவ்வித பிரதி பலனையும் பாராமல் உழைத்திடும் மாபெரும் திறம்படைத்தவர்களாக திகழ்வதும் மாநிலத் தலைவர் லயன் லி. பரமேஸ்வரன் அவர்களின் சுறுசுறுப்பான உழைப்பும் இத்தகைய நலத்திட்டங்கள் மக்கள் பெற பேருதவியாக இருப்பதாக குறிப்பிட்டு பேசினார். PPFA வின் புரவலர் திரு. இறைமுதல்வன் அவர்கள் மக்கள் நலனில் சமூக நோக்குடன் அவர்களது பிரச்சனைகளை தீர்த்திடும் சங்கமாக இதனைச் சார்ந்த ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மூலம் அரசு நிர்வாகத்திற்கும் தெரிவித்து நீங்கள் பயன்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மாதழ் இதழ் மட்டுமல்ல கடந்த 6 மாதங்களாக ஒளிபரப்பாகும் ஜீனியஸ் வெப் டிவியும் அனைத்து விதமான செய்திகள், தகவல்கள் என தொகுத்து தருவதாகவும், இது உங்கள் நலனில் பயன் பெறும் சங்கமாக எப்போதும் துணை நிற்கும் என்று மாநிலத் தலைவர் லயன் லி. பரமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டார்.
சங்கம் எப்படி என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருந்துவிட்டு பிறகு எதையுமே செய்யாமல் பெயருக்கு சங்கம் வைத்துக் கொண்டு இருக்கும் லெட்டர் பேடு சங்கமாக இது (PPFA) இருக்காது என்பதற்கு இங்குள்ள மாநில தலைமை முதல் நிர்வாகிகள் வரை பார்க்கிற போது மிகவும் பெருமையாக உள்ளதாக மணலி ஜமாத் தலைவர் ஹாஜி லயன் ஏ. அகபர் பாஷா தன் பேச்சில் குறிப்பிட்டார்.
போலீஸுக்கும், மக்களுக்கும் பாலமாக இருப்பது இந்த சங்கம் (PPFA)தன் பணியில் சிறப்புடன் செயல்படுவதாக பெருமிதம் கொண்டார் மாதவரம் காவல் துறை உதவி ஆணையர் திரு. சங்கரலிங்கம். தொடர்ந்து பேசுகையில் இந்த சங்கம் எங்களோடு உதவி புரிவது மட்டுமல்ல காவல் துறையில் பணியாற்றும் அடிமட்ட காவலர்களோடு நல்லதொரு உறவை ஏற்படுத்திக்கிட்டா மக்களிடையே விழிப்புணர்வு பெற உங்க உதவி என்பது சுலபமாக சென்றடையும். அதோடு குற்றங்கள் குறைவதற்கு மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்வது அவசியம்.
இது போன்ற மக்களுக்கு விழிப்புணர்வையும், தொண்டுகளையும் செய்திடும் நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய உதவி எப்போதும் உண்டு. மாதவரம் பகுதியிலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது போன்ற நலத்திட்ட உதவிகளை உங்களைப் போன்றவர்கள் பாகுபாடின்றி செய்திடும் பணியானது மிகவு பெருமையாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகின்றேன். அதே வகையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருப்பதாக திரு. முல்லை ஆர். ராஜசேகர் எம்.சி. தன் பேச்சில் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து மணலி நகரியத்தில் அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இத்துடன் ஏழைத் தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநிலத் துணை தலைவர் டி.ஜி. ஆனந்தன், PPFA மாநில அமைப்புச் செயலாளர் மகளிர் பிரிவு, ஏ. சித்ரா அவர்களின் ஒத்துழைப்போடு PPFA மணலி நகரியம் துணை செயலாளர் வி. பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் எஸ். தமிழ்வாணன், துணைத் தலைவர் கே. சரவணன், இணைச் செயலாளர் கே. ரவி, மற்றும் உறுப்பினர்கள் வி. ரமேஷ், எம். நௌஷாத், பி. மூர்த்தி, எஸ். ஜெயச்சந்திரன், முகமது அலி, மணலி நகர் மகளிர் பிரிவு எஸ். சாந்தி மற்றும் புது எம்ஜிஆர் நகரினை சேர்ந்த பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பான விழாவாக அமைந்தது.